பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2015

மோட்டார் சைக்கிள் கிடைக்காத உத்தியோகத்தர்கள் பணத்தினை 31ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் கடந்த டிசம்பர் 31க்கு பின்னர் பணம்
செலுத்தியவர்கள் தங்களுடைய பணத்தினை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகம், மாவட்ட செலயகங்கள், திணைக்களங்களில் கடமையாற்றும் பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள் கிடைக்காத உத்தியோகத்தர்கள் தங்களுடைய திணைக்கள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு செலுத்திய பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான பணம் செலுத்தும் கால வரையறைகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் கடந்த வருடம் டிசம்பர் 31க்கு முன்னர் பணம் செலுத்தியவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தாலும் அதன் பின்னர் பணம் செலுத்தியவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இம் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அப் பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக படிவம் ஒன்றினைப் பூர்த்தி செய்வதுடன், வங்கியில் திறைசேரிக்கு பணம் செலுத்திய மஞ்சள் பற்றுச்சீட்டின் பிரதியும் இணைக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த டிசம்பர் 31க்குப் பின்னர் பணம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.