பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2015

தயா மாஸ்டரை மாட்டிவிடும் டக்கிளஸ்

யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை  கிளிநொச்சியில் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளர் கே,என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
யாழில் 2006ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் ஆவரங்காலை சேர்ந்த தனது மகனை கடத்தி விட்டார்கள் என தாய் ஒருவர் கதறியழுது கொண்டு தனது பிள்ளையை தேடித்திரிந்தார். யாழில் பல்வேறு இடங்களில் தேடி திரிந்து கொண்டு இருந்த வேளை, கிளிநொச்சியில் அவருடைய மகன் இருப்பதாக தகவல் அறிந்து கொண்டார்.
அவ்வேளை யுத்தம் ஆரம்பமாகி ஏ 9 வீதி மூடப்பட்டு விட்டது. வீதி மூடபட்ட பின்னர் யாழில் இருந்து ஒருவர் கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கின்றார். இதன் மூலம் பாதை பூட்டப்பட்ட பின்னர் யாழில் இருந்து வன்னிக்குள் செல்ல ஏற்பாடுகள் இருந்துள்ளன.
அந்த தாயார் கிளிநொச்சியில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்று தன் பிள்ளையை கேட்டு அழுதுள்ளார். அந்த அலுவலகத்தில் தயா மாஸ்டர் உட்பட பலர் இருந்துள்ளனர். தாயார் தொடர்ந்து அழுததை அடுத்து அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு மேசையின் லாச்சிக்குள் இருந்து ஒரு தொகை அடையாள அட்டைகளை தூக்கி போட்டு இதில உங்கள் பிள்ளையின் அடையாள அட்டை இருக்கின்றதா ? என பாருங்கள் என கூறினார்களாம்.
அதில் அவருடைய பிள்ளையின் அடையாள அட்டை இருந்துள்ளது அதனை எடுத்து அவர்களிடம் கொடுத்த போது இவரை நாங்கள் படிக்க அனுப்பி உள்ளோம் இப்ப பார்க்க முடியாது நீங்கள் செல்லுங்கள் என அந்த தாயாரை துரத்தியுள்ளனர்.
இவ்வாறன சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன எனவே காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்