பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2015

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில் ஓடும்: நிர்வாகம் அறிவிப்பு

நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரெயில்களுக்கு பொதுமக்களிடம் போதுமான வரவேற்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் சென்னையை மழை வெள்ளம் சூழ்ந்த போது அனைத்து போக்குவரத்துகளும் சம்பித்த போது பொதுமக்களுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரெயில். கடந்த சில நாட்களாக மெட்ரோ ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

இந்நிலையில் வழக்கமாக காலை 6 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரெயில் சேவைகள் நாளைக்கு காலை 5 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் இரவு 10 மணிக்கு பிறகும் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.