பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2015

தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோஆன் கொடுக்காதது புத்திசாலித்தனமான முடிவு: ஸ்ரீநாத்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், ஐ.சி.சி. மேட்ச் நடுவர்களில் ஒருவமான ஸ்ரீநாத் அளித்த பேட்டியில்
கூறியதாவது:–
டெல்லி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘பாலோ ஆன்’ கொடுக்காமல் இந்திய அணி 2–வது இன்னிங்சை விளையாடியது புத்திசாலித்தனமான முடிவாகும். இதற்காக வீராட் கோலியை பாராட்டுகிறேன்.
இந்த டெஸ்டில் ரகானே மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரும், வீராட் கோலியும் நன்றாக ஆடி இந்திய அணியை முன்னேற்றம் அடைய வைத்தனர். அஸ்வினும், ஜடேஜாவும் இந்த டெஸ்ட் தொடரில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். அஸ்வின் உலகின் சிறந்த சுழற்பந்து வீரராக ஜொலிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.