பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2015

ஆசிரியர் பணிக்காக 6000 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்!- கல்வி அமைச்சர்


நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 6000 பேர் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், கல்வி நிர்வாக சேவையில் 852 வெற்றிடங்கள் நிலவுவதாகவும், எதிர்வரும் காலங்களில் அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
2009ம் ஆண்டிலிருந்து அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லையென தெரிவித்த அமைச்சர், இதுவரையில் அதிபர் தரத்திற்காக 3471 பரீட்சைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் எனவும், 6000 ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் 1190 பதவி வெற்றிடங்கள் அரச சேவைகள் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் பூரணப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.