பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

தெருக்களில் இறங்கி சேறு, கழிவுகளை அகற்றிய மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள்!

சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகளையும், சேறு, கழிவுகளையும் மக்கள் நலக் கூட்டணி
தலைவர்கள் களத்தில் இறங்கிய அகற்றினர்.

சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் தெருக்கள், சாலைகளில் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள், சேறு மற்றும் கழிவுகளை பல தன்னார்வ அமைப்பினர், பல இஸ்லாமிய அமைப்பினர் நேரிடையாகவே களத்தில் இறங்கி அவற்றை அகற்றி வருகின்றனர். 
இந்நிலையில், தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று காலை அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.