பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2015

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள்வெடிகுண்டுகளை வழங்கி வந்தசிரியாவை சேர்ந்த இருவர் ஜெனீவாவில் கைது

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வழங்கி வந்த 2 பேரை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்கள் மற்றும் நச்சு வாயுகளை விற்பனை செய்யபடுவதாக வந்த தகவலையடுத்து 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் சிரியாவை சேந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
தீவிரவாதிகளுக்கான ஆயுதங்களை தயார் செய்வது, நச்சு பொருட்களை வினியோகம் செய்வது போன்ற வேலைகளை மறைமுகமாக அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அல்கொய்தா, ஐ.எஸ். அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத கும்பலுக்கு இவர்கள் ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவற்றை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.