பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

மீசாலை வீதியில் விபத்து : இருவர் ஸ்தலத்திலே சாவு

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே  உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சின்னகுஞ்சு உதயராசா (வயது - 55), ஜேசு அன்பு (வயது - 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த பேரூந்துடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.