பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2015

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அனைத்து மாகாண அமைச்சர்களும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களின் அமைச்சர்களும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர் என வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரட்ன தெரிவித்தார். கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 8 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் பங்கேற்றனர். எனினும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லையென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.