பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2015

போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைப்பில் பிரித்தானியப் பிரதமர் வாயில் தளத்தின் முன் டிசெம்பர் 20ம் நாளன்று இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பாதுகாப்பினையும் விடுதலையினை உத்தரவாதப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தினை கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் தபால் அட்டைப் பரப்புரையொன்றினையும் மேற்கொண்டு
வருகின்றது.
இதனொரு அங்கமாக, பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறியீட்டுரீதியில் சிறைகூட முகப்பொன்றினையும் இரத்தக்கறையுடன் கைதிகள் உள்ளிருப்பது போலவும் வடிவமைத் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்