பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2015

தங்களின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் – ஐக்கிய நாடுகளின் செயற்குழு

பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் என்று நம்புவதாக, பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின்
செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆரியல் டலிஸ்ட்கி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் குறித்த பல்வேறு பரிந்துரைகளை செயற்குழு வழங்கியுள்ளது.இவற்றை அமுலாக்குவதற்கான சமிக்ஞைகளை அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை.எனினும் இவை அமுலாக்கப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.