பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2015

நடுத்தெருவில் மர்மமான முறையில் எரிந்து இறந்த நபர்: குழம்பி நிற்கும் பொலிசார்

சுவிசில் நடுத்தெருவில் நபர் ஒருவர் மர்மமாக எரிந்து இறந்த சம்பவம் தொடர்பாக பெர்ன் பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இன்டர்லேக்கன் சுற்றுலா பகுதியில் மாட்டன் என்ற இடத்தில் உள்ள வீதி ஒன்றில் நபர் ஒருவர் மர்மமாக எரிந்து இறந்தார்.
இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இது தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்காததால் பெர்ன் பொலிசார் குழம்பி உள்ளனர்.
அவர் 54 வயதுடையை பேர்த்துக்கல் குடிமகன் என்றும், அவர் பெர்ன் நகரில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்ட பொலிசார், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் இதுவரை அதுபோன்ற எந்த தடயங்களும் கிடைக்கவிலை என கான்டூனல் மண்டல் பொலிசார் கூறியுள்ளனர்.