பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2015

புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA/ SLMC கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
புதிய அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முன்கூட்டியே சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்