பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலை உதவி


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயக மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலையினால்  தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் கிளிநொச்சி, உருத்திரபுரம் வடக்கு, கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த செருக்கன், சாளம்பன், குஞ்சுப்பரந்தன், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
வயல் நிலங்களோடு இணைந்திருக்கும் தாழ் நிலப்பகுதிகளில் இம்மக்களின் குடியிருப்புக்கள் அமைந்து இருப்பதால் மோசமான வெள்ளப்பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளனர்.
உருத்திரபுரம் செயற்பாட்டாளர் திலக்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம அலுவலகர் சிம்சன்போல், கட்சியின் மாவட்டஅமைப்பாளர் வேழமாலிகிதன், கிராம அபிவிருத்தி சங்கதலைவர் சந்திரன், மாதர் சங்க செயலாளர் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.