பக்கங்கள்

பக்கங்கள்

9 டிச., 2015

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்புக்காக எஃப்.எம்.: கடலூரில் தொடக்கம்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்பு குறித்த செய்திக்காக கடலூரில் அரசு சார்பில் வானொலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 8-ம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் பல குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. பல்வேறு பகுதி மக்கள் வீட்டை வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்டவையும் பலியாகின. அதேபோல் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களும் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடலூரில் சமுதாய வானொலி (எஃப்.எம்.) இன்று (9-ம் தேதி) தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த வானொலி 107.8 என்ற எண்ணில் ஒலிபரப்பாகும். இதன் அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது. இங்கிருந்து 15 சதுர கி.மீட்டருக்கு இந்த ஒலிபரப்பு கிடைக்கும்.

இந்த வானொலியில், 15 கி.மீட்டருக்கு உட்பட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரணம் வழங்க வேண்டிய இடங்கள், வீடுகளை இழந்தவர்களுக்கு தங்குவதற்கான முகாம், நிவாரணம் வழங்க வேண்டிய முறை உள்ளிட்டவைகள் குறித்து அடிக்கடி தெரிவிக்கப்படும்.

இந்த வானொலி, விரைவில் கடலூர் மாவட்டம் முழுவதும் ஒலிபரப்பாகும் விதத்தில் மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்புக்காக எஃப்.எம்.: கடலூரில் தொடக்கம்