பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2015

கூட்டமைப்பின் பிழவுக்கு துணைபோனால் மீண்டும் அடிமைகளாக வாழ நேரிடும்: பா.அரியநேந்திரன் எச்சரிக்கை

அரசியல் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தலைமையினாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கும் வேளையில் திட்டமிட்ட முறையில் அதனைக் குழப்புவதற்கான சதி வேலைத்திட்டங்கள் அரங்கேறிவருவது தமிழர்களுக்கச் செய்யும் பெரும் துரோகமாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை படையாண்டவெளி மாருதம் கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தனை தெரிவித்தார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வ எட்டப்பட இருந்த வேளையில் தமிழர்களுக்குள் இருந்து எதிர்ப்பலைகள் தோன்றி தமிழர்களுக்கான அரசியல் தீர்வை இல்லாமல் செய்த வரலாறுகளே அதிகமாக காணப்படுகின்றது.

கடந்த ஆயுதப்போராட்ட வரலாற்றிலும் கூட மிகப்பெரிய படை பலத்துடன் தமிழ் மக்களின் தீர்வைப் பெறுவதற்காக தியாகப்போராட்டத்தினை முன்னெடுத்து அதன் மூலம் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த காலகட்டத்தில் 2004 ஆண்டு கருணா என்ற கருவியைப்பயன்படுத்தி விடுதலைப்புலிகளை இரண்டாகப்பிரிந்தது அதன்விளைவால் 2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில் பாரிய இழப்பைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது எனவும் கூறினார்.

அத்துடன் அரசியல் தீர்வு கிடைக்கலாம் என்று கூறப்படும் இக்காலகட்டத்தில் விக்னேஸ்வரன் என்ற கருவவியைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கான சதிவேலைகள் திரைமறைவில் இடம்பெறுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இவ்வாறான சந்தர்பத்தில் தமிழர்களாகிய நாம் தற்போது அரசியல்பலமாக இருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீது நம்பிக்கைவைத்து எமக்கான அரசியல் தீர்வை பெறுவதற்கான வழியினை ஆராயவேண்டுமே தவிர தமிழ்த்தேசியக்கூட்டமை பிரிப்பதற்கு யாரும் துணைநிற்கக் கூடாது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு துணைபோனால் போனால் வடகிழக்கு மக்கள் அடிமைகளாக வாழவேண்டி ஏற்படும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மேலும் தெரிவித்தார்.