பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2015

விமர்சனங்களுக்கு மத்தியில் எல்லை நிர்ணயம்: ஜனாதிபதி

புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறை தொடர்பான பிரேரணைகள் பாராளுமன்றத்தில் கடந்த முறை நிறைவேற்றப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் தமது அரசாங்கம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அது குறித்த தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இதுவரை கலைக்கப்படாதுள்ள சகல நகர சபைகளினதும் உத்தயோகபூர்வ பதவிக்காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளின் ஊடாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதோடு அவை மக்களை சென்றடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.