பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2016

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு! 3 சீனப் பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்ததாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 
இதன்போது விபச்சார விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று சீனப்பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து குறித்த விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பாடசாலை வீதியில் இந்த விடுதி அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபச்சார விடுதியின் முகாமையாளர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று சீனப்பெண்கள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.