பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2016

பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ



 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து இரண்டு தினங்கள் ஆகிறது.   அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ள வீடியோ வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது.

பழனி மலை முருகன் கோவிலில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர்.  பழனி மலைப்பாதையில் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில், இரவு நேரத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு, அசைவம் சாப்பிடும் வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.