பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2016

வெலிமடையில் பாரிய குழப்பம்... விசேட அதிரடி படையினர் விரைவு

அமைதியின்மை காரணமாக பண்டாரவளை - வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டயரபா பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றில் கடந்த 31ஆம் திகதி ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இவ்வாறு காயமடைந்த நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிந்த பிரதேசவாசிகள் மதுபானசாலைக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், பிரதேசவாசிகளினால் மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.