பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2016

மாணவிகள் மர்ம மரணம் : தீவிர புலன் விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவு



விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகளின் உடல்கள் கல்லூரி அருகே உள்ள  கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.  இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  3 மாணவிகளின் குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.   மேலும், இந்த மருத்துவ மாணவிகளின் மர்ம மரணம் குறித்து தீவிர புலன் விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.