பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2016

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? சரத்குமார் பேச்சு



வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் தெரிவித்தார்.


ச.ம.க. கூட்டம்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கான சமத்துவ மக்கள் கட்சி செயல் வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் பேசியதாவது:-

அரசியலிலும், கட்சியிலும் சாதி இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சமத்துவ மக்கள் கட்சியை உருவாக்கினேன். நான் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவ்வளவு எளிதாக வாழ்க்கையில் முன்னேறி, இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. உழைப்பு மட்டுமே வாழ்க்கையை முன்னேற்றும். நீங்கள் ஒற்றுமையாக உறுதியுடன் செயல்பட்டு, கட்சியை வழிநடத்த வேண்டும்.

எங்கள் ஆட்சி பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியாக இருக்கும் என எல்லா கட்சியினரும் சொல்கிறார்கள். நாம் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இலவசமாக எந்த பொருளையும் கொடுக்காமல், கல்வியை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என குரல் கொடுப்போம்.

யாருடன் கூட்டணி?

தற்போது, நாம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டாலும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு சரத்குமார் பேசினார்