பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜன., 2016

முல்லைத்தீவில் கணிதப்பிரிவில் முதலிடம்


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த விஸ்வலிங்கம் விஜிந்தன் A, 2B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் குறித்த பாடசாலையைச் சேர்ந்த  கமலகாந்தன் பூர்வீகன் 3B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.