பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2016

வழக்கை ரத்து செய்யக்கோரி சிம்பு மனு: பதில் அளிக்க கோவை போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு



பீப் பாடல் விவகாரத்தில் கோவையில் நடிகர் சிலம்பரசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கோவை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு சிம்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை காவல்நிலையத்தில் ஆஜராக தேவையில்லை என தெரிவித்துள்ள நிலையில், ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்கள் சென்னை, கோவை ஆகிய இரண்டு இடங்களில் பதிவாகி உள்ளதால் கோவை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு வாதிடப்பட்டது. 

சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, இதுதொடர்பாக கோவை காவல்துறை 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.