பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2016

சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தாய்நாடான சுவிட்சர்லாந்து நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வரும் அந்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் குடிமக்களில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அதிகரித்துள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட சுவிஸ் வெளியுறவு துறை அமைச்சகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் குடியேறிய சுவிஸ் குடிமக்களின் எண்ணிக்கை 2 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் என தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கை 7,61,930 ஆகும்.
குறிப்பாக, சுவிஸ் நாட்டிற்கு அருகே உள்ள ஐரோப்பிய நாடுகளில் தான் சுவிஸ் குடிமக்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர்.
உதாரணமாக, 2015ம் ஆண்டில் மட்டும் பிரான்ஸ் நாட்டில் 4,173 நபர்களும், ஜேர்மனியில் 2,103 நபர்களும் குடியேறியுள்ளனர்.
இதே புள்ளிவரிசையில், அமெரிக்காவிற்கு 1,500 நபர்கள், பிரித்தானியாவிற்கு 1,200 நபர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு 740 நபர்களும் குடியேறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக உலகத்தில் உள்ள நாடுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சுவிஸ் குடிமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த இடம்பெயர்வுக்கு இரட்டை குடியுரிமை பெறவதும் ஒரு காரணமாக இருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.