பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2016

அரையிறுதியில் சானியா ஜோடி



ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

உலகின் நம்பர் ஒன்னான இந்த ஜோடி இன்று நடந்த கால்இறுதியில் 6–2, 4–6, 6–1 என்ற கணக்கில் 12–ம் நிலையில் இருக்கும் அன்னா லெனா (ஜெர்மனி)– சோகோ வான்ட் வெய் ஜோடியை வீழ்த்தியது.

சானியா– ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக 34 வெற்றியை பெற்று முத்திரை பதித்தது. இந்த ஜோடி அரை இறுதியில் ஜூலியா (ஜெர்மனி)– கரோலினா (செக்குடியரசு) அல்லது வனியாகிங் (அமெரிக்கா)– குட்ரி வட்சேவா (ரஷியா) ஜோடியை சந்திக்கிறது.