பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2016

தைப்பூச பக்தர்கள் மீது கார் மோதி மூவர் ஸ்தலத்திலே சாவு

கோலாலம்பூர், மலேசியா செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த தைப்பூச பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 3 பேர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

சிரம்பான் கோலாலம்பூர் விரைவுச் சாலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் 'Universiti Kebangsaan Malaysia' அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்களை மோதிய BMW கார், நிற்காமல் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் சடலங்கள், கோலாலம்பூர் பொது வைத்தியசாலைக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.