பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2016

ஜெயலலிதாவுடன் விஜயதாரணி சந்திப்பு


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்ட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டத்தொடர் முடிந்த பிறகு விஜயதாரணி, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
முதல்வர் சந்திப்பு குறித்து விஜயதாரணி கூறுகையில், ''முதல்வரிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது அநீதியாகும். என் நீக்கம் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளேன். அவர்கள் சொல்லும் பதிலுக்கேற்பவே, என் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன் என்று கூறியுள்ளார்.