பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2016

விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி இரகசியமாக ஒளிப்பதிவு;கடற்படை அதிகாரி கைது

இலங்கை விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு (வீடியோ) செய்த கடற்படை அதிகாரியொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படைத் தளபதி நேற்று காலை தனது இல்லத்திலிருந்து இராணுவ தலைமையகத்துக்கு வாகனத் தொடரணியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி சுற்றுவட்டம் அருகே வைத்து ஒருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடற்படையின் லெப்டினன்ட் தர அதிகாரி எனவும், இவர் முச்சக்கர வண்டியொன்றுக்குள் மறைந்து இருந்து விமானப்படைத் தளபதியின் பாதுகாப்புத் தொடரணியை இரகசியமாக ஒளிப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.

அவர் வாகனத் தொடரணியைப் ஒளிப்பதிவு செய்வதைக் கண்ட விமானப்படைத் தளபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் அவரை விரட்டி சென்று தும்முல்லை பகுதியில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.