பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2016

பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ்

சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில், கட்சி தலைவர் அமித் ஷா உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், அக்கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக்கொண்டார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நேதாஜி தொடர்பான 100 ஆவணங்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்திர குமார் போஸ், பிரதமரின் இந்த நடவடிக்கையை முழு மனதுடன் வரவேற்பதாக கூறியதுடன், இது இந்தியாவின் வெளிப்படையான நாள் என்றும் பாராட்டிய நிலையில் இன்று பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.