பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2016

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்

கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர வண்டிக்கான பிரிவின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலை வந்தால் தாம் பலத்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நடாத்துவதற்குத் தயாராகி வருவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்புக்குள் முச்சக்கர வண்டிகள் நுழைவது மற்றும் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முனையும் அரசு அதற்குப் பதிலாக சிறிய ரக நனோ வாகனங்களைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.