பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2016

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில்
முதலிடம்இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தொழில்நுட்பப் பிரிவிலும் இந்தப் பாடசாலையின் மாணவனே மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணிதப் பிரிவில் 24 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 6 மாணவர்களுமாக 30 பேர் வரை 3ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.