பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2016

ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பன்மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை. வெப்பநிலை -35 C.ஆக உணரப்படலாம்!

கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த பல நகராட்சி சபைகள் மற்றும் கனடா சுற்றுச்சூழல் பிரிவினர்  வார இறுதி நாட்களில் மிகுந்த குளிர் காலநிலை காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று இரவு குளிர்காற்றால் ஏற்படும் வெப்ப இழப்பு இல்லாது வெப்பநிலை -23 C வீழ்ச்சியடையும் என வானிலை கணிப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரொறொன்ரோ மற்றும் ஒன்ராறியோ தென்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை அதி உயர் குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு வெள்ளிக்கிழமை இரவு பலத்த வடமேற்கு வன்காற்று வீசும் எனவும் கனடா சுற்று சூழல் எச்சரிக்கின்றது. இது மட்டுமன்றி வெள்ளிக்கிழமை மாலை காற்றுடன் கூடிய குளிர் -35 Cஆக உணரப்படும். சனிக்கிழமை பகல் நேர வெப்பநிலை -15 C ஆகவும் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது -12 C ஆகவும் உணரப்படும். தோலுறைவு தன்மை கொண்டவர்கள் மற்றும் இருதய பிரச்சனைகள் உள்ளவர்கள் வீடுகளிற்குள் இருப்பது சிறந்ததெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோர்க் பிராந்தியத்தின் பொது சுகாதாரப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை வரை குளிர் காலநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் அவசரகால இரவு முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன.