பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2016

குடும்ப நலநிதி திட்டம் - சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் : ஜெ., அறிவிப்பு



சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  ’’குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் பயன்பெறும் தொகை 3 லட்சமாக உயர்வு பெறும் என்று அறிவித்தார்.  குழு காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கும் தொகை 1.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.  குடும்ப நல உதவி திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடம் இருந்து ரூபாய் 60 பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தார். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணப்பயன் ரூபாய் 60 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது பணப்பயன் 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர் கணக்கில் தேர்வு பெறவேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது. 605 கிராம சுகாதாரத்துறை செவிலியர்கள் துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.  ஓய்வு பெற்ற சத்துணவுப்பணியாளர்களின் ஓய்வூதியம் 1,000ல் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.  ஓய்வூதிய உயர்வால் 86,813 பேர் பயனடைவார்கள் என்றும் அறிவித்தார்