பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2016

யாழ், கல்வியங்காட்டில் கொலை வெறியுடன் இளைஞரை துரத்தித் துரத்தி வெட்டிய கும்பல்

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் புதிய செம்மணி வீதியை சேர்ந்த க.பீரதீபன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீதியில் தனது முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீதும் மோதலில் ஈடுபட்ட குழுக்களில் ஒரு தரப்பினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் அவரது முச்சக்கரவண்டியையும் சேதமாக்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர் அவர்களிடமிருந்து தப்பியோட முற்பட்ட போதும் அவரை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.
இதனால் கை மற்றும் கால் பகுதிகளில் காயத்திற்குள்ளான நபர் அருகில் இருந்த வீடு ஒன்றுக்குள் சென்று மறைந்து அவர்களிடமிருந்து தப்பிக்கொண்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த குறித்த நபர் அவ் வீட்டுக்காரருடைய உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.