பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2016

ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை முக்கியஸ்தர்களுடன் மங்கள சமரவீர சந்திப்பு?


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் ஜெர்மனியில் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகத் தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களான அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோருக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜேர்மனியில் ஜேர்மனி, பேர்லினில் நடைபெற்றுள்ளது.
பேர்லினில் உள்ள மெரியட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு முன்னதாக அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் ஹோட்டலின் வரவேற்பறையில் அமர்ந்திருந்ததை பேர்லினில் வாழும் இலங்கையர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.
இவர்களின் கலந்துரையாடலின் போது இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் அதற்கான நடைமுறைகள், அவற்றின் முன்னேற்றம் என்பன குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்நது கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.