பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2016

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்! சவால் விடும் மகிந்தவின் மைத்துனர்

யுக்ரெய்னில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கை அரசாங்கம் தேடி வருகிறது. 
இந்நிலையில்   உதயங்க வீரதுங்க யுக்ரெய்னில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிரூபிக்கும் வகையில் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு செவ்வியை வழங்கியுள்ளார்.
தாம், தேயிலை வர்த்தகத்தில் பல வருடக்காலமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், யுக்ரெய்ன் 30 வருடங்களாக தமது தாய்நாடு போன்று அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்
தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் சுமத்தியதன் காரணமாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்க முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் முடியுமானால் தம்மை கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
தமது திறமையை கண்டே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தம்மை யுக்ரெய்னுக்கான தூதுவராக நியமித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது கஷ்டத்துக்கு மத்தியில் தேயிலை வர்த்தகத்தை தொடர்வதாக அவர் கூறியுள்ளார்