பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2016

விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது; அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் : குஷ்பு பேட்டி




காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தி யாளர்களிடம், 

விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.  மற்றபடி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை.  சின்னச்சின்ன கட்சிகள் எவற்றோடும் கூட்டணி குறித்து பேசவில்லை.

 பிஜேபியின் நிலைமைதான் மோசமாக இருக்கிறது.  யாராவது தங்களை கூப்பிடமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.  அந்த ஏக்கம் மக்களுக்கு தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.