பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2016

பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம்?! ராஜபக்ஷர்களை வேட்டையாட திட்டம்


ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேசிய அரசாங்கத்தில் பொறுப்பான பதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குற்ற விசாரணை திணைக்களத்தை தனக்கு கீழ் நியமிக்குமாறு பொன்சேகா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் பிரதமர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.