பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2016

டொமினிக்கிடம் மண்டியிட்டார் நடால்

images (5)
நடைபெற்று வரும் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான
ரபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தியெமிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப் போட்டியில், 4-6, 6-4, 6-7 என்ற செட் கணக்கில் டொமினிக் தியெமிடம் மண்டியிட்டார்.
இறுதி போட்டியில், ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம், ஸ்பெயினின் நிக்கோலஸ் அல்மகுரோவை எதிர்கொள்ளவுள்ளார். களிமண் தரையில் ‘கிங்’ என்று அழைக்கப்படும் நடால் காலிறுதியில் இத்தாலியின் பவுலோ லாரன்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
களிமண் தரையில் 346 வெற்றியை ருசித்துள்ள நடால் இதுவரை 48 சம்பியன் பட்டத்தை வென்றுள்ள போதும், கடந்த ஆண்டு எந்த கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தையும் வெல்லாத நிலையில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தமை குறிப்பிடதக்கது.