பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2016

விஜயகாந்த் கூட்டணி யாருடன்? டிராபிக் ராமசாமி தெரிந்துகொண்ட ரகசியம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு
நிலவி வரும் சூழலில்,சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ள புதிய தகவல் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்,அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் தனித்தனியே இன்று சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,"விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதை விஜயகாந்திடம் பேசியதில் இருந்து தெரிந்துகொண்டேன். இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும். விஜயகாந்த்திற்கு எனது முழு ஆதரவு உண்டு" என்று தெரிவித்தார்.