பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2016

அடுத்தது யார்? இலங்கையின் அரசியலில் தீடீர் பரபரப்பு

tamilmission.com
இலங்கையில் அடுத்த அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட இருப்பதனை குறிக்கும் வகையில் வெலிக்கடையின் சிறைச்சலையில்
உள்ள சிறையறைகள் மிக வேகமாக சுத்தம் செய்து வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றன .
யோஷித ராஜபக்ஷ அடைக்கப்பட்டிருக்கும் எச் பிரிவு சிறையறைகளை அண்மித்த எஸ் பிரிவு சிறையறைகளே இவ்வாறு சுத்தம் செய்யப்படுகின்றன.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவின் கணவர் விஜயகுமாரதுங்க சிறை வைக்கப்பட்டதும் இந்த அறைகளிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறைச்சாலை சுத்தம் அடுத்து ஓர் முக்கியஸ்தர் ஒருவரின் கைதை குறிக்கும் வகையில் இடம்பெறுவதால் அது கோட்டாபாய ராஜபக்சவுக்கானதா என்று சந்தேகம் பரவலாக நிலவி வருகின்றது.