பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2016

விஜயகாந்த் முதல் அமைச்சர் வேட்பாளர் - தேமுதிகவுக்கு 124 மக்கள் நலக் கூட்டணிக்கு 110




தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.