பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2016

தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும்: வைகோ பேச்சு



தேமுதிக+ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் பேசிய வைகோ, மக்கள் நலக் கூட்டணி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும். தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் என்றார்.