பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2016

5 மாநிலங்களிலும் 17 கோடி வாக்காளர்கள்: தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்


5 மாநிலங்களிலும் 17 கோடி வாக்காளர்கள்: தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், மேற்சு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 22 தொடங்கி ஜூன் 5ல் முடிவடையும். 

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலத்திலும் 17 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். புதுச்சேரியில் 9 லட்சத்து 27ஆயிரம் பேர். தேர்தலுக்கு 5 நாளுக்கு முன்பு பூத் சிலிப் தரப்படும். படத்துடன் கூடிய பூத் சிலிப் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 9 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அசாமில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 65,613 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அசாமில் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர் உள்ளிட்ட 7 அடிப்படை வசதிகள் இருக்கும்.