பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2016

கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை: விஜயகாந்த்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழன்) தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர் சென்றார். 

அங்கு நடந்த தேமுதிக கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை. தேமுதிக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக வரும் தகவல்கள் தவறானது. கூட்டணி அமைந்தால் தொண்டர்களிடம் கூறுவேன். தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.