பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2016

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயார்! – ஜனாதிபதி

ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவையில் இன்று மாகாண முதலமைச்சர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மாகாண சபைகளை பலப்படுத்துவதன் ஊடாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். நவீனகாலத்தில் குறிப்பிட்ட ஒரு பிராந்தியம் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தாது, அதிகாரத்தை சிறைந்த முறையில் எவ்வாறு பகிரலாம் என்பது குறித்தே நிபுணர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

அதிகார பகிர்விற்கு எவராவது எதிர்ப்பு வெளியிடுவார்கள் ஆயின், அவர்கள் மாற்றங்களுடன் பயணிக்க முடியாதவர்கள். இந்த விடயத்தில் அரசாங்கமும் மாகாண சபைகளும் இணக்கப்பாட்டை எட்டுவது முக்கியமானது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில், எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது