பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2016

ஜப்பானில் மூக்குடைபட்ட கோட்டபாய: கறுப்பு பணத்தை மாற்ற எடுத்த முயற்ச்சி படுதோல்வி

மகிந்த கூட்டு எதிர்கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில். அதற்கு உதவிசெய்பவர்கள் என்று கூறி. வெளிநாட்டில் உள்ள பல சிங்களவர்களை ஒன்று திரட்டு
கிறார் கோட்டபாய.
இவ்வாறு வெளிநாடுகளில் கூட்டங்களை போட்டு அங்கே சேகரிக்கப்பட்ட பணம் என்று சொல்லி , பெருந்தொகையான பணத்தை இலங்கைக்குள் கொண்டுவர அவர்கள் முயற்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். இதனூடாக வெளிநாட்டில் உள்ள ராஜபக்ஷர்களது பணத்தை வெள்ளையடித்து. அதனை மீண்டும் இலங்கைக்குள் கொண்டு வரும் முயற்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

ஜப்பானில் உள்ள , சுகுபா என்னும் நகரில் பல இலங்கையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதன் ஒரு அங்கமாக முதலில் இன் நகரில் மகிந்தவுக்கு ஆதரவு கூட்டம் என்ற போர்வையில் ஒரு கூட்டம் இடம்பெற்றுள்ளது. ஆனால் சில ஈயை தவிர வேறு யாரும் அங்கே கூடவில்லை. இதனால் பல மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் மண் கவ்வியுள்ளது. அத்தோடு குறித்த திட்டமும் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.