பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2016

டுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழில் கச்சான் விற்பனை!

விடுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழ்ப்பாணத்தில் கச்சான் விற்பனை இடம்பெறுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முகமாலை, ஓமந்தைச் சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்லும் அனுமதிக்காக பயன்படுத்தப்படும் விண்ணப்பத்தில் தயார் செய்த பைக்கற்றில் கச்சான் விற்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் புலிகளின் முன்னரங்கப் பகுதிகளாக விளங்கிய முகமாலை மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்லும் பயணிகள் அனுமதிக்காக ஓர் படிவம் பயன்படுத்தியது வழமையானது.

இவ்வாறு பயன்படுத்தப்படும் விண்ணப்பங்கள் புலிகள் காலத்தில் அனைவர் வீட்டிலும் காணப்பட்டது. இருப்பினும் போர் நிறைவின் பின்பு இவற்றை காண முடியாது . இருப்பினும் நேற்றைய தினம் நல்லூர் ஆலய சூழலில் கச்சான் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் குறித்த படிவத்தில்  தயார் செய்த பைக்கற்றில் கச்சான் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.