பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2016

அலைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி படுகாயம்!

தண்டவாளத்தில் நடந்துகொண்டு அலைபேசியில் உரையாடிச்சென்ற இளைஞன் மீது ரயில் மோதிய சம்பவமொன்று சாவகச்சேரி ஐயா கடையடியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தடியை சேர்ந்த துரைசிங்கம் ஜங்கரன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியொன்றில் கடமையாற்றும் மேற்படி இளைஞன், தனது நண்பர்களுடன் ஐயா கடையடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தவேளை உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோதே ரயில் இவரை மோதியுள்ளது. 

படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.